டில்லி,

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வரும் செய்வாக்கிழமை அன்று தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் “ஒருவாரத்தில் தீர்ப்பு வெளியாகும்” என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதையதுட்டு வருகின்ற திங்கள் கிழமை (13.02.17) அன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில், தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதி அமித்வா ராய் அன்று விடுமுறை எடுத்துள்ளார்.

ஆகவே  செவ்வாய்க்கிழமை அல்லது அதற்கு மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.