உச்சநீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜவாஹிருல்லா, “தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டத்தின் மீதும், உச்சநீதிமன்றத்தின் மீதும் முஸ்லிம் சமுதாயம் என்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றது. இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும் என்று முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

இந்த வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு 2010ல் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை போன்றில்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் நடைமுறையில் உள்ள உரிமையியல் சட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அமையும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.