அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பு யாருக்கு சாதமாக வந்தாலும், அது மத ரீதியிலான சண்டைகள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இதர இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள், தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி வகுப்பு நடத்துவதை விடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உடனடியாக ஈடுபட தொடங்க வேண்டும் என்று தமிழக டிஜிபி ஜே.கே த்ரிபாத்தி உத்தரவிட்டுள்ளார்.