டெல்லி: இந்தியாவில் இரண்டு திட்டங்களுக்கு ஜப்பான் ரூ.2,288 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க  சம்மதம் தெரிவித்து உள்ளது. அதன்படி,  மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டத்துக்கும் (Mumbai Trans-Harbor Link), மிசோரம் மாநிலத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கும் 2,288 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜப்பான் மகாராஷ்டிராவில் திட்டத்திற்காக JPY 30.755 பில்லியன் அல்லது சுமார் ரூ 1,728 கோடி மற்றும் மிசோரமில் மையத்தை மேம்படுத்த JPY 9.918 பில்லியன் அல்லது சுமார் 560 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை டிரான்ஸ்-ஹார்பர் இணைப்பு திட்டம் மும்பையை நவி மும்பையுடன் இணைப்பதன் மூலம் மும்பை பெருநகர பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கிறது. இது திட்டத்துக்கான மூன்றாம் கட்டக் கடனாக 30.755 பில்லியன் ஜப்பானிய யென் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,728 கோடி ரூபாய் ஆகும்.

இது மட்டுமின்றி, மிசோரம் மாநிலத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் அமைப்பதற்கு 9.918 பில்லியன் யென் கடன் வழங்கவும் ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.  இது இந்திய ரூபாய் மதிப்பில் 560 கோடி ரூபாய் ஆகும்.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் 2,288 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது ஜப்பான் இந்தியா இடையே ஒப்பந்தம்  போடப்பட்டு, கடன் வழங்க ஜப்பானும் சம்மதம் தெரிவித்து உள்ளது,.