டோக்கியோ

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆளும் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

தற்போது ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜப்பானைப் பொறுத்தவரைப் பிரதமர் பதவியில் இருக்கும் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவது வழக்கம்.

கடந்த 2921 ஆம் ஆண்டே புமியோ கிஷிடா பிரதமராக பதவியேற்றாலும் கட்சியின் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஜப்பானிய ஊடகங்கள் தற்போது லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து கிஷிடா ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளன. அவர் தங்கள் கட்சியினர் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.