பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு ஜவேரியா கானுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

சமீரின் பெற்றோர் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்திய விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை அன்று வாகா எல்லை வழியே இந்தியா வந்தடைந்தார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜவேரியா கான்.

21 வயதான ஜவேரியா கானுக்கு இந்தியாவில் தங்க 45 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளதை அடுத்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த அந்த பெண்ணை அவரது வருங்கால கணவர் சமீர் மற்றும் வருங்கால மாமனார் அகமது கமால் கான் யூசுப்சாய் ஆகியோர் ‘தூள்’ என்ற வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

ஜவேரியா கானுக்கு விசா வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி கூறிய சமீர் கான் அடுத்த ஆண்டு ஜனவரியில் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதன்பின் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லை மீறிய காதலால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் எல்லை தாண்டி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்பவரை திருமணம் செய்து கொள்வதற்காக சீமா ஹைதர் என்ற பாகிஸ்தானியர் நேபாளம் வழியாக இந்திய எல்லையைத் தாண்டியதும், ஜூலை மாதம், அஞ்சு என்ற இந்தியப் பெண், தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற பல எல்லை தாண்டிய திருமணங்கள் அல்லது தம்பதிகள் சமீப காலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்பவரை திருமணம் செய்து கொள்வதற்காக சீமா ஹைதர் என்ற பாகிஸ்தானியர் நேபாளம் வழியாக இந்திய எல்லையைத் தாண்டியபோது இது தொடங்கியது.அவர்களது உறவு விவாதத்தின் முக்கிய தலைப்புகளில் ஒன்றாக மாறியது. இதற்கிடையில், ஜூலை மாதம், அஞ்சு என்ற இந்தியப் பெண், தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றார். இருப்பினும், அவர் சமீபத்தில் வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினார்.