மலரில் மகரந்தச் சேர்க்கை செய்யும் ரோபோ-தேனீக்கள்: அறிவியல் விந்தை

Must read

ஜப்பானில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியின் (AIST) ஒரு குழுத் தேனீக்கள் போன்ற ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் இந்த சாதனங்களைக் குதிரைமுடி, 100$ டாலர் ட்ரோன்கள் மற்றும் ஒரு ஒட்டும் அயன் ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

இந்தச் செயல்முறை மிகவும் எளிமையானது- முதலில், ட்ரோன்கள் தேனீக்களைப் போல மலர்களில் பறந்து சென்று அமரும். மலரின் உள்ளே இருக்கும் மகரந்தம் அயன் ஜெல் மற்றும் குதிரைமுடி சேர்ந்து இருப்பதன் காரணமாக ட்ரோனுடன் ஒட்டிக்கொள்ளும். அதே மகரந்தம் பின்னர் அடுத்த பூவில் உதிர்ந்துவிடும். அந்த ரோபோ- தேனீக்கள் இயக்குவது மட்டும் தான் நமது வேலை.

AIST ல் உள்ள எய்ஜியோ மியாகோ எனும் வேதியியலாளர் 2007 ஆம் ஆண்டில் ஒட்டும் அயன் ஜெல்லை தற்செயலாக உருவாக்கினார் என்று பாப்புலர் மெக்கானிக்ஸ் தெரிவித்துள்ளது. தோல்வி எனக் கருதப்பட்ட அந்த ஜெல் பத்து ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு மூலையில் கிடந்தது. சமீபத்தில் மியாகோ அவர்கள் அதை மீண்டும் எடுத்து போது அது இன்னும் ஒட்டும் தன்மையுடன் இருப்பதை கண்டு மகிழ்ந்து தனது புதிய திட்டத்திற்கு அது சரியாக இருக்கம் என்று எண்ணினார்.

இப்போது “ரோபோ-தேனீக்கள்” திட்டத்திற்கு மியாகோ தான் தலைவர்.
வழக்கமான தேனீக்களில் என்ன தவறு உள்ளது. அவை இருக்கும்போது இந்த ரோபோ-தேனீக்களை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?”, என்று நீங்கள் கேட்கலாம்.
இதற்கான பதில், வழக்கமான தேனீக்கள் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இறந்து வருகின்றன என்பதைத் தவிர வேறு எந்தச் சிறப்பான காரணமும் இல்லை. தேனீக்களின் மரணம் முதலில் மர்மமாகவே இருந்தது என்றாலும், இப்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. வழக்கம் போல், அதற்கும் நாம் தான் காரணம்.

2014 ஆம் ஆண்டில், ஹார்வர்ட்டின் பொது சுகாதார துறையினுடைய ஒரு ஆய்வை டைம் பத்திரிக்கை ஒரு அறிக்கையாக வெளியிட்டது. அது பூச்சிக்கொல்லிகள் தான் காலோனி கொலாப்ஸ் டிசார்டர் (சிசிடி) அதாவது தேனீக்கள் சரிவு சீர்குலைவிற்கு காரணம் என்று கண்டறிந்தது. இந்த நிகழ்வில் தொழிலாளி தேனீக்கள் திடீரென்று எச்சரிக்கை இல்லாமல் ஒரு கூட்டத்தை விட்டுச் சென்றுவிடும். இதற்கு காரணமாகக் கூறப்படும் பூச்சிக்கொல்லிகளில் நியோநிகோடிநாய்ட்ஸ் (NNIs) இருப்பதால் அது முழுமையாகவோ அல்லது ஒரளவிற்கோ ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் ஐக்கிய ஒன்றியம் ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

தேனீக்களின் அழிவிற்கு மற்றொரு காரணி காலநிலை மாற்றமாக இருக்கலாம். 2015 ஆம் ஆண்டில் சயின்ஸ் இதழில் வெளிவந்த ஒரு ஆய்வில், அமெரிக்காவில் டஜன் கணக்கான வண்டு இனங்கள் வாழ்விட இழப்பு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது.

தி ஆஸ்திரேலேசியன் பீ-கீப்பர் ( ஆஸி. தேனி வளர்ப்போர்) அளித்துள்ள தகவல்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள தேனீ இனங்களும் நெருக்கடியில் உள்ளன. தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் தேனீ வளர்ப்பவர்கள் நமது தேனைப் பாழாக்கக்கூடிய ஆண்டிபயாட்டிக்குகளைக் கொண்டு தேனீ நோய்களுக்கு எதிராகப் போராடுகின்றனர்.

ஆஸ்திரேலேசியன் பீகீப்பர், 900க்கு மேற்பட்ட ஆய்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து , மகரந்தச் சேர்க்கைமீது நியோநிகோடிநாய்ட்ஸ் (NNIs) எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். 2014 ஆம் ஆண்டில், இந்த அறிக்கையைக் கொண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் NNIs மற்றும் தேனீ ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தியது. எனினும், இன்று வரை இங்கே NNIs சட்டப்பூர்வமானது மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே பூமியில் நம்மிடம் மகரந்தச் சேர்க்கையாளரான தேனீக்கள் இருக்கின்றன. எனவே, தேனீக்களின் நடத்தையைப் பிரதிபலிக்கும் ரோபோக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே நமக்குக் கிடைத்திருக்கும் தேனீக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், அடுத்து நாம் “ரோபோ-மரங்களை” உருவாக்க வேண்டியதாயிருக்கும்.

More articles

Latest article