புற்றுநோய் எதிர்க்கும் மினி- ரோபோ படை

Must read

 

விஞ்ஞானிகள் நுணுக்கமான மருத்துவ நடைமுறைகளில் ரோபாட்டிக்ஸை இணைக்கப் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். அவர்கள் ஒரு நபரின் கண்ணில் மருந்தைப் போடவோ அல்லது உடலில், சென்றடைய கடினமாக உள்ள பகுதிகளில் செயல்பட வளைந்து கொடுக்கும் சிறிய சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளனர்.

இப்போது, அவர்கள் நுண்ணிய ரோபோக்களின் காந்த திரளைப் பயன்படுத்தி புற்றுநோயை எதிர்த்துத் திறம்பட போராட ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஹம்பர்க், ஜெர்மனியில் உள்ள ” பிலிப்ஸ் இன்னொவேடிவ் டெக்னாலஜீஸ் எனும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு ரோபோவையும் தனித்தனியாகக் கையாளவும் காந்த புலத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பணிகளை அவற்றிற்கு ஒதுக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் சயின்ஸ் ரோபோடிக்ஸ் என்ற ஆய்விதழில் பிப்ரவரி 15 ம் தேதி அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.

முன்னதாக, நுண்ணிய சாதனங்களைத் துல்லியமாகக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு சவாலான மற்றும் கடினமான பணியாக இருந்தது, ஏனெனில் அவை அனைத்தும் ஒரே காந்த புலத்தினால் கட்டுப்படுத்தப்படும் போது ஒரே மாதிரி செயல்பட்டன.
ஆய்வாளர் ஜர்கன் ரஹ்மெர் லைவ் சயின்ஸிற்கு அளித்த பேட்டியில் “”எங்களின் புதிய முறையில், மனித உடலின் உட்பகுதியில் சிக்கலான கையாளுதலை செயல்படுத்த வைக்கும்,” என்று கூறினார்.

விஞ்ஞானிகள் இப்போது உடலில் உள்ள குறிப்பிட்ட கட்டிகளுக்கு புற்றுநோய்-கொல்லும் கதிரியக்க “விதைகளை” வழங்க ரோபோக்கள் படையைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்த வழியில் புற்றுநோய்க்கு சிகிச்சையளித்தால் ஆரோக்கியமான திசுக்கள் தப்பித்து, தீங்கான பக்க விளைவுகள் ஏற்படுவதைக் குறைக்க முடியும்.

More articles

Latest article