ஜம்மு பேருந்து நிலைய குண்டு வீச்சு : ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது

Must read

ம்மு

ம்மு நகர பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த குண்டு வீச்சு தாக்குதலை திட்டமிட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் தீவரவாதி ஃபரூக் அகமது பட் கைது செய்யப்பட்டார்.

யாசிர் பட்

காஷ்மீர் மாநில தலைநகரமான ஜம்முவில் தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.   கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் தேதி ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீசப்பட்டு இரு காவலர்களும்  பொதுமக்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர்.   அதன் பிறகு சென்ற வருடம் டிசம்பர் மாதம் 28-29 தேதிகளில் காவல்நிலையத்தை குறி வைத்து தாக்கும் போது பேருந்து நிலையத்தில் குண்டு வீச்சு நடைபெற்றது.

நேற்று மூன்றாம் முறையாக ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது.   இதில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் மற்றும் 30 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இந்த சம்பவத்துக்கு பிறகு ஜம்மு காவல்துறையினர் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் அந்த பேருந்து நிலைய கண்காணிப்பு காமிரா பதிவை ஆய்வு செய்தனர்.  அந்த பதிவின் மூலம் குண்டு வீசிய தீவிரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளான்.   அவன் பெயர் யாசிர் பட்.   அவனை கைது செய்து விசாரித்த போது  தன்னை குண்டு எறியுமாறு கட்டளையிட்டது ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஃபரூக் அகமத் பட் என்பவர் என ஒப்புக் கொண்டான்.

அத்துடன் இந்த தாக்குதலை திட்டமிட்டது ஃபரூக் அகமது படி என்பதும் யாசிர் பட் வாக்குமூலத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.    இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஃபரூக் அகமது பட் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யபட்டு விசாரணை தொடர்கிறது

இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது இளைஞரான முகமது ஷரிஃப் ஆவார்.    தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் ஜம்மு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   அவர்களில் 6 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தாக்குதலை  காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்  வன்மையாக கண்டித்துள்ளார்.   அத்துடன் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ,20000 நிதி உதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article