S.A சந்திரசேகர் இயக்கும் 70-வது படம் லவ் மேட்டர்…!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்

S.A சந்திரசேகர் இயக்கும் 70-வது படத்தின் பெயர் லவ் மேட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய் ஜோடியாக வைபவி, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இது ஜெய்யின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: athulya, jai, Love matter, SA Chandra shekar, vaibavi
-=-