பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

Must read

ஐதராபாத்: பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தாதே பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று கூறினார்.

More articles

Latest article