மகாராஷ்டிராவில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 9217

Must read

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருக் காவலர்களுக்கும் அதிக அளவில்  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று புதியதாக மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,217ஆக அதிகரித்துள்ளது. 7,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,939 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 மணிநேரத்தில் மேலும் 2 காவலர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

More articles

Latest article