சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

திமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது வழக்கமானது. அதுபோலவே, தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு திருமண செலவு, புதிய கார், இருசக்கர வாகனம் வாங்கும் வகையில், ரூ.6 லட்சம் முதல் 14 லட்சம் வரை  கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள கூற்றிக்கையில்;  புதிய பைக், கார் வாங்கவும் திருமணம் செய்யவும் அரசின் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.