கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள காயல் கரையோர மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.

விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது.

தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம். வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார் ஸ்டாலின்.

மார்ச் 6-ல் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து பேசினேன். தற்போது, வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்று தெரிவித்தார்.