சென்னை: தமிழ்நாட்டில் ஆடர்லி முறை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள நீதிபதி, டிஜிபி மற்றும் தமிழகஅரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்  சாரித்து வருகிறார்.ஏற்கனவே கடநத் விசாரணைகளின்போது,  ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும், அதுகுறித்த தகவல்களையும் காவல்துறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் நடைபெற்ற விசாரயின்போது,  காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன், தமிழகத்தில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் அவகாசம் கோரப்பட்டது.  இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி சுப்பிரமணியம்,  ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் தமிழ்நாட்டில்  பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று கடுமையாக கூறியதுடன்,   ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என்று விமர்சித்ததுடன்,   ஆடர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும்,  ஆடர்லிகள் விவகாரத்தில் முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை தேவை என்றும் கூறினார்.

ஆடர்லில் ஒழிப்பு பற்றி உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வியை எழுப்பிய நீதிமன்றம், எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நாயை பராமரிக்க ‘ஆர்டர்லி’: உள்துறை செயலாளருக்கு 3வார அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…