டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான  சசிதரூருக்கு சிறந்த மனிதருக்கான  ‘செவாலியே விருது’ ஐ இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து உள்ளது.

செவாலியர் விருது பொதுவாழ்வில் சிறப்பிற்கு உரியவருக்கு வழங்கப்படும் பிரஞ்சு நாட்டின் அரசு வழங்கும் மிக உயரிய விருதாகும். அதாவது சிறந்த மனிதர்களாக அல்லது உயர் மனிதர்களாக அறியப்படும் மனிதர்களைத் தேர்ந்து பிரஞ்சு அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது.

செவாலியே (பிரெஞ்சு மொழி: Chevalier) விருது  என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும். அதன்படி நடப்பாண்டு முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான சசிதருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சசிதரூரின் எழுத்து மற்றும் பேச்சாற்றலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சசிதரூர் செவாலியே விருதக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, இந்தியாவில் உள்ள  பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைன்  சசிதரூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செவாலியே விருதுபெற்ற தமிழர்கள்:

அஞ்சலி கோபாலன், (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)

மதன கல்யாணி, பேராசிரியை

சிவா இராமநாதன், யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்

சிவாஜி கணேசன் (கலைத்துறை பங்களிப்பிற்காக – 1995)

அலெக்ஸ், நடிகர்

ஷெரீன் சேவியர் (மனித உரிமைசார் பணிகளுக்காக)

நாகநாதன் வேலுப்பிள்ளை – யாழ் பருத்தித்துறை ஆத்தியடி

கமல்ஹாசன், நடிகர்

வாணிதாசன், புலவர்