இத்தாலி பிரதமர் இந்தியா வருகை!

Must read

டெல்லி,

ரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வந்துள்ள இத்தாலி பிரதமரை பிரதமர் மோடி வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இத்தாலிய பிரதமர் பாவ்லோ ஜெண்டிலோனி தனது மனைவி எமானுல்லா  மற்றும் 15 பேர்கொண்ட குழுவினனருடன் இரண்டு அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சுஷ்மாசுவராஜ் உள்பட முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள்  பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இத்தாலி பிரதமர், உலக அரங்கில் பொதுவான இலக்குகளைக் கொண்ட இந்தியா-இத்தாலி இடையே வலுவான பொருளாதார உறவுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அதனை மேலும் வலுப்படுத்த தனது பயணம் வாய்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பின்னர் டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை இத்தாலி பிரதமர் சந்திக்க இருப்பதாகவும், அப்போது . இருநாட்டு பொருளாதார மற்றும் வணிக உறவுகள் குறித்து அப்போது அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளா  கடற்பகுதியில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு காரணமாக இரண்டு இத்தாலி மாலுமிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது.

More articles

Latest article