இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜியாம்ப்ருனோ உடனான தனது 10 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டார்

மீடியாசெட் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் ஜியாம்ப்ருனோ அதே சேனலில் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில் ஆபாசமாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து, சக பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும் தன்னுடன் உல்லாசமாக இருக்க அவர்களை அழைத்ததாகவும் சில வீடியோ கிளிப்பிங்குகள் வெளியானது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பிரதமர் மெலோனிக்கு பல்வேறு வகையில் அழுத்தம் தரப்பட்டது.

இந்த நிலையில் ஜியாம்ப்ருனோ உடனான தனது 10 ஆண்டுகால உறவை முறித்துக்கொள்வதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.

46 வயதாகும் மெலோனி 2014 ம் ஆண்டு முதல் 42 வயதாகும் ஜியாம்ப்ருனோ உடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.