2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக 150 தொகுதிகளில் வெல்வதே கடினம் என்று கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் துவங்கிய போது அக்கட்சி 180 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன் ஆனால் ஒவ்வொரு நாளும் பாஜவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதைப் பார்க்கும் போது அக்கட்சி 150 இடங்களை தாண்டாது என்று உறுதியாகக் கூறமுடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2019 தேர்தலில் 303 தொகுதிகளை பாஜக எப்படி வென்றது என்ற குழப்பமே இதுவரை தீராத நிலையில் 10 ஆண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடி வரும் வேளையில் “இந்த முறை நானூறு” என்ற பாஜக-வின் கோஷம் வெற்றுகோஷமாகவே அனைத்து தரப்பினராலும் பார்க்கப்படுகிறது.