சென்னை: திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, அண்ணாநகர் மோகன் வீடுகள் உள்பட 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ளன. இதன்பொருட்டு அரசியல் களம் தகித்துக்கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக கடைசி கட்ட பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், வாக்காளர்களுக்கு அன்பளிப்பு அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை போன்றவை அதிரடி ரெய்டுகளை நடத்தி,  கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும், பொருட்களையும் கைப்பற்றி வருகின்றன.

இந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் நீலாங்கரை வீடு உள்பட அவரது கணவருக்கு சொந்தமான 5 இடங்களிலும்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்திமுக வேட்பாளர்கள் கரூர் செந்தில்பாலாஜி, அண்ணாநகர் மோகனுக்கு சொந்தமான இடங்கள், ஜிஸ்கொயர் நிறுவன உரிமையாளர் பாலா வீடு உள்பட 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழு கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்ப்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக, தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருவண்ணாம லையில் திமுக வேட்பாளர்  எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் அதிடியாக சோதனை நடத்தப்பட்டது. கடலூரில் அமைச்சர் எம்.பி.சம்பத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும்,  திமுக, அதிமுக, மநீம, தமாபா உள்பட பலரது ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு, கோடிக்கணக்கான   பணம் பறிமுதல் செய்யப்பபட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று திமுக தலைவரின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு உள்பட  திமுக வேட்பாளர்கள் வீடு மற்றும் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.