அதிமுக முன்னாள் அமைச்சர் இல்லத்தில் வருமான வரி சோதனை

Must read

கோவை

திமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகளுமாகத் திகழ்ந்தவர் எஸ் பி வேலுமணி.   அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் பெரும்புள்ளியாக விளங்கும் எஸ் பி வேலுமணி மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவர் கோவை ஸ்மார்ட் சிடி திட்டம், மேம்பாலம், கோவை மேம்பாட்டு பணிகள் என ரூ.1500 கோடி ஊழல் செய்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் புகார் அளித்திருந்தார்.  மேலும் முன்னாள் அமைச்சர் தமிழகம் முழுவதும் ரூ.5000 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணி இல்லம் உள்ளிட்ட 52 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

More articles

Latest article