ரக்கோணம்

மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் ரயில் நிலையத்தில் 300 மீட்டர் தூரம் தானாகவே நகர்ந்து சென்றதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னக ரயில்வேவில் முக்கியமான ஒரு ரயில் நிலையம் அரக்கோணம் ரயில் நிலையமாகும்.  இந்த நிலையம் வழியாக வட இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கும் வட மாவட்டங்களுக்கும் ரயில்கள் செல்கின்றன.  இங்கிருந்து சென்னை, காஞ்சி, திருத்தணி போன்ற இடங்களுக்கு மின்சார ரயில்கள் சென்று வருகின்றன.

நேற்று காலை சுமார் 9.15 மணி முதல் சென்னையில் இருந்து வந்த மின்சார ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் 6 ஆம் நடைமேடையில் நின்று கொண்டிருந்தது.  அந்த ரயிலில் ஓட்டுநர், பயணிகள் என யாரும் இல்லை.  நேற்று மாலை 4.10 மணிக்கு இந்த ரயில் திடீரென தானாக நகர்ந்து செல்லத் தொடங்கியது.

இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஓட்டம் பிடித்தனர்.  ரயிலை நிறுத்துவது எப்படி எனத் தெரியாமல் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திகைத்துப் போனார்கள்.  அந்த பிளாட்பார முடிவில் மணல் கொட்டி வைக்கப்பட்டதால் ரயில் சக்கரங்கள் மண்ணில் புதைந்து 300 மீட்டர் தூரம் ஓடிய ரயில் தானாகவே நின்றுள்ளது.

இதில் யாருக்கும் எந்த அபாயமும் உண்டாகவில்லை.என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது,