நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர்ப்  பகுதிகளில் கனமழை 

Must read

சென்னை

நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

சென்னை வானிலை மையம் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என தெரிவித்திருந்தது.   அதில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளும் அடங்கும்.  நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கிண்டி, தி.நகர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை,பல்லாவரம் அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, வளசரவாக்கம் , போரூர், மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, குன்றத்தூர், செம்பரபாக்கம், திருவேற்காடு, கே.கே.நகர். ராமாபுரம் , வடபழனி,கோயம்பேடு, ஆவடி, அம்பத்தூர்,பட்டாபிராம், சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், கோட்டூர்புரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது.

நேற்று பெய்த  கனமழை காரணமாகக் குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம், அம்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.  இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

More articles

Latest article