புதிய பட்டதாரிகளுக்குக் குறைவான சம்பளம்- ஐ.டி நிறுவனங்கள் முடிவு
புதிய பட்டதாரிகளுக்குக் குறைவான சம்பளம்- ஐ.டி நிறுவனங்கள் முடிவு

ஐதராபாத்: இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவைகள் நிறுவனங்கள், நுழைவு மட்டத்தில் அதிகமான மென்பொருள் பொறியாளர்களின் வரவைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு புதிய பட்டதாரிகளின் சம்பளத்தை குறைத்துக் கொடுக்க ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாக தொழிலில் அனுபவமுள்ள டி.வி. மோகன்தாஸ் பாய் கூறுகிறார். இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1994-ம் ஆண்டு முதல் 2006 முதல் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். இன்ஃபோசிஸ் பிபிஓ இயக்குநர் குழு தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்போது மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

அதிகளவு பொறியியல் பட்டதாரி கள் இருப்பதால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், புதியவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை ஐடி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது. இந்த சம் பளங்களை நிறுவனங்கள் உயர்த்த வேண்டும் என மோகன்தாஸ் பாய் கூறினார்.

“இந்திய தகவல் தொழில்நுட்பத் (IT) துறையின் பிரச்சினையே இது தான். இந்திய ஐடி புதிய பட்டதாரிகளுக்குச் சரியான சம்பளம் கொடுப்பதில்லை. உண்மையில், பெரிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது என்று ஒருவருக்கொருவர் பேசி வருகிறார்கள்,” என்று அவர் PTI யிடம் தெரிவித்தார்.
அறிக்கைகளின் படி, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ 2.25 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள் ஆனால் இப்போது அவர்கள் அதனை வெறும் ரூ 3.5 லட்சம் சம்பளமாக மட்டுமே உயர்த்தியுள்ளனர். இதனைப் பணவீக்கம் சரிசெய்யப்பட்டுள்ள கண்ணோட்டத்திலிருந்து (inflation-adjusted perspective) பார்க்கும்போது இது உண்மையான சம்பளத்தில் மகத்தான குறைவை தெரிவிக்கிறது உயர்ந்துள்ளது என்று குறிப்பிடுகின்றன.

பெங்களூரு தலைமையிடமாகக் கொண்டிருந்த இன்ஃபோசிஸ் லிமிட்டெட்டில் தலைமை நிதி அதிகாரியாய் பணியாற்றிய மோகன்தாஸ் பாய், பெரிய நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளின் ஊதியத்தை உயர்த்தக் கூடாது என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது ஒரு மிக சோகமான உண்மை தான் என்று கூறினார்.

“இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. அதுவும் பெரிய சேவை நிறுவனங்கள். இதுபோல் அவர்கள் செய்யக் கூடாது. இதனை அவர்கள் விட்டுவிட வேண்டும்,” என்று மோகன்தாஸ் பாய் கூறினார்.

தற்போது மணிப்பால் குளோபல் கல்விச் சேவைகள் மற்றும் ஆரின் கேபிடலின் தலைவராக இருக்கும் பாய், ஐடி நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரித்து உயர் பதவியில் இருப்போருக்கு செய்யும் ஈடுகளைக் குறைக்க வேண்டும் என்று கூறினார். “நாம் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றால், திறமையானவர்கள் இத்துறைக்கு வரமாட்டார்கள்,” என்று மோகன்தாஸ் பாய் கூறினார்.

அவரை பொறுத்தவரை, இப்போது, ஐடி சேவைகள் நிறுவனங்களில் சேருவோர் பெரும்பாலும் இரண்டாம் நிலைக் கல்லூரிகளிலிருந்து தான் வருகிறார்கள், சந்தேகமின்றி அவர்கள் திறமைசாலிகள் தான். “ஆனால் நமக்கு முதல் நிலைக் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் தேவை. எனவே, இது அவர்களுக்கு மிகப் பெரிய சவால்; அவர்கள் புதிய பட்டதாரிகளுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும்” என்று மோகன்தாஸ் பாய் கூறினார்.

2006 முதல் 2011 வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உள்கட்டமைப்பு, நிர்வாகம், மனித வளங்கள், வசதிகள் மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் தலைவராக இருந்த பாய், பெரிய ஐடி நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளின் சம்பளத்தை உயர்த்தக் கூடாது என்று பேசி வருவது கடந்த ஏழு ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்றார் மோகன்தாஸ் பாய்.

“உபரி திறன் இருப்பதால் அவர்கள் சம்பளத்தை உயர்த்தவில்லை. அதனால் தான் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் தேய்வு விகிதம் அதிகமாக உள்ளது (இளம் பொறியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறுவனத்தை விட்டுச் செல்கிறார்கள்) தேய்வு விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஊழியர்கள் சம்பளத்தினால் அதிருப்தியாக இருப்பதே,” என்று மோகன்தாஸ் பாய் கூறினார்.