டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

17வது பாராளுமன்றத்தை கட்டமைப்பதற்கான  நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, ஏப்ரல் 11ந்தேதி நடைபெற உள்ள 91 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

முதல்கட்ட தேர்தல்  ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.  மனுதாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 25-ந் தேதி ஆகும். 26 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 28-ந் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முதல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. வேட்பு மனு தாக்கல் நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.