தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நிலவை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14 ம் தேதி இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கலன் வெற்றிகரமாக நேற்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்பட்டது.

இந்தியர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரோவின் இந்த சாதனையை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவை தனது மொபைல் போனில் இருந்து தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலுவிடம் தமிழில் பேசியை முதலமைச்சர் தமிழகம் வரும்போது நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பங்கு முக்கிய இடம்பிடித்துள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று அப்போது ஸ்டாலின் கூறினார்.