ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்களை ஒருசேர விண்ணுக்கு அனுப்பி மாபெரும் உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ.

isro-satellite-ap-big75

இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. விண்ல் ஏவப்படவிருக்கும் செயற்கைக்கோள்களில் இரண்டு இந்திய தயாரிப்புகள் மற்றவை பல்வேறு வெளிநாடுகளுக்கு சொந்தமான செயற்கைக்கோள்கள். ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை, இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரோ ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை ஏவியது. இதற்கு முன் ரஷ்யா 2014 ஆம் ஆண்டு 37 செயற்கைக்கோள்களையும், அமெரிக்கா 2013-இல் 29 செயற்கைக் கோள்களையும் ஒரே நேரத்தில் ஏவியுள்ளன.
ஏவப்படவிருக்கும் 83 செயற்கைக் கோள்களும் ஒரே சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை ராக்கெட் அந்த சுற்றுவட்டப்பாதையிலேயே ராக்கெட் வலம்வர வேண்டும். இதுதான் சவாலான விஷயமாகும். இஸ்ரோ இப்பணிக்கென PSLV-XL ராக்கெட்டை அனுப்பவிருக்கிறது. இந்த ராக்கெட்டால் ஒரே சமயத்தில் 1,600 கிலோ எடையை தூக்கிச்செல்ல முடியும்.
இச்சாதனையை வரும் ஜனவரி 2017-இல் நிகழ்த்த இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது.