திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை காலை தொடங்குகிறது.
ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை  வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் ஸ்தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
1murugan
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதையொட்டி விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கொட்டகைகள் அமைப்பது உள்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 5-ம் தேதி மாலையும், 6-ம் தேதி இரவு சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன.