அகமதாபாத்: இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கில், 2 காவல்துறை அதிகாரிகளை விசாரிப்பதற்கு, சிபிஐ அமைப்பிற்கு அனுமதி மறுத்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இஸ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவுசர்.

சர்ச்சைக்குரிய என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் இஸ்ரத் ஜஹானும் அவருடனிருந்த சிலரும். இந்த என்கவுண்டர் பலவிதமான கேள்விகளை எழுப்பியது.

ஆனால், இந்த வழக்கில் ஒரு திடீர் திருப்பமாக, என்கவுண்டரில் தொடர்புடைய அதிகாரிகளான டி.எச்.வன்ஸரா மற்றும் என்.கே.ஆமின் ஆகியோரை விசாரிக்க, குஜராத் அரசு எங்களை அனுமதிக்கவில்லை என சிபிஐ அமைப்பு, சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரத் ஜஹானின் தாயார், குஜராத் அரசின் இந்த செயலை எதிர்த்து சிபிஐ நீதிமன்றத்தை நாடியுள்ளார். “குஜராத் அரசின் இந்த முடிவு, பல நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

– மதுரை மாயாண்டி