இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில் பேசப்படுகிறது.

லட்சத்தீவின் வளர்ச்சிக்காகவும் கிரிமினல் சட்டங்களில் மாற்றம் செய்ததற்காகவும் இந்த நிலப்பரப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேலுக்கு எதிராக இங்கு வாழும் 70,000 மக்களும் 2021 ம் ஆண்டு ஓரணியில் திரண்ட போது லட்சத்தீவு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.

2021ம் ஆண்டு லட்சத்தீவு மக்கள் போராட்டத்தின் போது

இதனையடுத்து தற்போது லட்சத்தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த பயணம் மாலத்தீவுகளை வெகுவாக பாதித்துள்ளது.

லட்சத்தீவுகளைப் போன்று இயற்கை எழில் நிறைந்த கடற்கரைகள் நிறைந்த பகுதியான மாலத்தீவு நாடுகளுக்கு பெருமளவிலான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சுற்றுலா செல்கின்றனர்.

இதே கடல் பிராந்தியத்தில் உள்ள லட்சத்தீவுகளில் சுற்றுலா மேம்படிற்கான நடவடிக்கைகள் மாலத்தீவு நாடுகளின் வருமானத்தை பாதிக்கக் கூடும். தவிர, இஸ்லாமிய நாடான மாலத்தீவுகளில் மதுபானங்களுக்கும் கட்டுப்பாடு உள்ளதால் அந்த நாட்டின் சுற்றுலா பெருமளவு பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து தரமற்ற விமர்சனங்களை மேற்கொண்ட மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், லட்சத்தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

ஏற்கனவே லட்சத்தீவுகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இஸ்ரேல் தற்போது இந்திய சுற்றுலாவை மேம்படுத்த தேவையான உதவிகளை செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் காற்று வாங்கிக்கொண்டிருந்த லட்சத்தீவு கடற்கரைகள் இனி உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை