பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

Must read

புதுடெல்லி:

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில், இந்த பாதிப்பு இஸ்கானையும் விட்டு வைக்கவில்லை.

பிரிட்டனின் கிரேட்டர் லண்டன் பகுதியில், சர்வதேச சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னஸின் (இஸ்கான்) யுனைடெட் கிங்டம் பிரிவு இயங்கி வருகிறது. 15,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இஸ்கானில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அமைப்பை சேர்ந்த 5 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

70-களில் இஸ்கான் பக்தர், ராமேஸ்வர தாஸ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மூன்று தசாப்தங்களுக்கும் இருந்து வரும் நிலையில், முதல் முறையாக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.

மார்ச் 12 அன்று மற்றொரு பக்தரின் இறுதிச் சடங்கிற்காக இஸ்கானை சேர்ந்த 1,000 பேர் கூடியிருந்தபோது பக்தர்கள் மத்தியில் வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இஸ்கான் அமைப்பின் பிரிட்டன் பிரிவு தலைவர் பிரகோசா தெரிவிக்கையில், அந்த நேரத்தில் பிரிட்டனில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மார்ச் 16 அன்று இங்கிலாந்தில் உள்ள அனைத்து கோயில்களையும் இஸ்கான் மூடி விட்டது என்றும் அவர் கூறியுள்ளது.

இஸ்கான் அமைப்பில் 21 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கிலாந்தில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து, இஸ்கானில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 21 பேரைத் தவிர்த்து, மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக பிரகோசாவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு, 41 ஆயிரத்து, 903 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதில், 4,313 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் பிரதமர், போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோரையும், இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்த பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பிரிட்டனில், பொருளாதார பாதிப்பு அதல பாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article