இஷா – ஆகாஷ்

மும்பை

ண்ணியின் வருகையால் எங்கள் குடும்பம் முழுமை அடைந்துள்ளது” என முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் வைரவியாபாரியின் மகளான ஸ்லோகா மேத்தாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது தெரிந்ததே.   இந்த நிச்சயதார்த்தம் சர்வதேச அளவில் பேசப்படும் விவகாரமாக உள்ளது.   ஆகாஷ் அம்பானிக்கு ஒரு இரட்டை சகோதரி இருக்கிறார்.  அவர் பெயர் இஷா அம்பானி.   அவர் இந்த நிச்சயதார்த்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

                   ஸ்லோகா – ஆகாஷ்

இஷா அம்பானி, “இன்று இதயங்கள் இணையும் நாள்,  நான் இதயங்கள் என சொன்னது அண்ணன் ஆகாஷ் மற்றும் அண்ணி ஸ்லோகா மட்டும் அல்ல, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நான் குறிப்பிட்டுள்ளேன்.  ஸ்லோகா எனது பள்ளி நாட்களில் இருந்தே பழகி வரும் தோழி.   இப்போது அவர் எனது குடும்ப உறுப்பினர் ஆகி உள்ளார்.

எனது சிறிய வயதில் இருந்தே பழகி வரும் ஸ்லோகா எனக்கு ஒரு சகோதரியைப் போன்றவர்.     நாங்கள் வேறு வேறு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும்  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்.   அதனால் நான் அவரை என் சகோதரன் மனைவி என்பதை விட எனக்கு கிடைத்த ஒரு சகோதரி எனவே கூறுவேன்.    அவர் வருகையால் எங்கள் குடும்பம் தற்போது முழுமை அடைந்துள்ளது.”  என நிச்சய தார்த்த விருந்தில் பேசி உள்ளார்.