டில்லி:

நீதித்துறையில் மத்திய அரசு தலையீட்டு வருகிறது. இதுகுறித்து கூடி விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு சக நீதிபதியான செல்மேஸ்வர் கடிதம் எழுதி உள்ளார்.

தலைமை நீதிபதி மிஸ்ராவின் நடவடிக்கைக்கு எதிராக சக நீதிபதிகளான மூத்த நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம்  பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாராளுமன்றத்திலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது இம்பீச்மென்ட் கொண்டு வர காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் நீதிபதி செல்மேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட 22 மூத்த உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், நீதித்துறையிலும், நீதிபதிகள் நியமனத்திலும் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்ட பரிந்துரை களை ஏற்காமல் மத்திய அரசு தலையீடு செய்து வருவதாகவும்,  இதே நிலை நீடித்தால், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டால், அது ஜனநாயகத்துக்கு சாவுமணி. எனவே இதற்கு முடிவு கட்ட,  நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு குறித்து, அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு  நீதிபதி செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் டில்லியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.