டில்லி

த்திய அரசின் ஐ சி எஸ் இ மற்றும் ஐ எஸ் சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணைய மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா தாக்குதல் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.   கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவ்வகையில் சி ஐ எஸ் சி நடத்தும் ஐ சி எஸ் இ மற்றும் ஐ எஸ் சி ஆகியவற்றின் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த மாணவர்களுக்கு உள் மதிப்பீடு மற்றும் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது,  அதையொட்டி இன்று மாலை 3 மணிக்குத் தேர்வு முடிவுகள் இணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.   ஐ சி எஸ் இ தேர்வில் 99.34% மாணவர்களும்,  ஐ எஸ் சி தேர்வில் 96.84% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்த முடிவுகளை cisce.org மற்றும் results. Cisce.org ஆகிய இணையதளங்களில் காணலாம்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை குறும் தகவல் மூலம் தெரிந்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாணவர்கள் தங்கள் அடையாள எண்ணை 09248082883 என்னும் எண்ணுக்கு குறும் தகவல் மூலம் அனுப்ப வேண்டும்.  அதாவது ICSE/ISC (unique ID) என அனுப்பினால் தேர்வு முடிவுகளைப் பெற முடியும்.  மேலும் மாணவர்கள் தங்கள் டிஜிட்டல் சான்றிதழை இன்னும் 48 மணி நேரம் கழித்து அரசின் டிஜிலாக்கர் செயலி மூலம் பெற முடியும்.