நெட்டிசன்

சாந்திதேவி (Shanthi Devi) அவர்களின் முகநூல் பதிவு:

நான் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் கூவும் சபாநாயகர் தனபால் அவர்களே…

உங்கள் சொந்த நாமக்கல் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கோகுல் ராஜ் படுகொலை செய்யபட்ட போதும்

தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த நேர்மையான காவல்துறை அதிகாரி விஷ்னுபிரியா சாதிவெறிபிடித்த காவல்துறை அதிகாரிகளால் நெருக்கடி உள்ளாகி தற்கொலைக்கு தூண்டிய போதும்

தாழ்த்தப்பட்ட இளைஞன் சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு சகோதரி கௌசல்யா நிர்கதியாக நிற்க்கும் போதும்

நீங்கள் சார்ந்திருக்க அருந்ததியர் சமுகம் உள் இட ஒதுக்கிட்டிற்காக அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக நிலைப்பாட்டை கூறாமல் அம்மாவிடம் கேட்டுவிட்டுவருகிறோம் என்று அதிமுக இது வரை தனது நிலைப்பாட்டை கூறாத போதும்

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்காக நெருப்பு போராளிகள் அண்ணன் நீலவேந்தனும் , அக்கா இராணியும் நெருப்புக்கு இரையாகி போன போதும்

அரியலூர் தங்கை நந்தினி இந்து முன்னனி சாதிவெறியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போதும்

பரமக்குடியில் அதிமுக அரசால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை துப்பாக்கிக்கு இரையாக்கிய போதும்

எடப்பாடி பழனிசாமியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்த்த காவல்துறையை சேர்ந்த காவலர் தாக்குதலுக்கு உள்ளாக்கிய போதும்

தேனியில் அதிமுகவை பன்னீர் செல்வத்தின் தம்பியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நாகமுத்து கொலை செய்யப்பட்ட போதும்

தேனியில் அய்யம்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிமுகவை சார்ந்த பன்னீர்செல்வத்தின் துணையோடு சாதிய வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போதும்

திண்டுக்கல்லை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பாலகுருநாதன் காதலித்த குற்றத்திற்காக படுகொலை
செய்யப்பட்ட போதும்

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்இன்னும் பலவகையில் சாதிய வன்கொடுமைகளுக்கு, படுகொலைக்கு, பாலியல் வல்லுறவுக்கு ஆளான போதும்

தன் குடும்பம் நல்லா இருக்கவேண்டும் தான் பதவி இருக்க வேண்டும் தன்னுடைய மகன், மகள் மருத்துவர்களாக உருவாக்கதிலும் முனைப்போடு இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தின் சபாகேடு சபாநாயகர் தனபால் அவர்களை உங்களுக்கு இன்று தான் நீங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்த்தவர் என்று நினைவு வந்ததா?

இது நாள் வரை நீங்கள் என்ப கோமாவில் இருந்தார்கள்

நீ பதவிக்கு வருவதற்கும் அந்த பதவியை தக்கவைப்பதற்கு உங்களுக்கும் உங்கள் சமுகம் தேவைப்படுகிறதா?

உங்களால் நீங்கள் பிறந்த சமூக முன்னேற்றத்திற்காக ஏதும் பங்களிப்பு செய்தது உண்டா?