“புதுக்கோட்டை  மாவட்டத்தில், அடுத்த, 15 வருடங்களுக்கு  ‘ஹைட்ரோ கார்பன்’ மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க, துபாயை தலைமையிடமாக கொண்ட, ஜெம் என்ற நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.   இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து விவசாய சங்கஙகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தாவது:

“மீத்தேன், ஷேல் காஸ் திட்டத்தின், மாற்று வடிவம்தான் இது.

இதை செயல்படுத்தினால், புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாயம் பாதிப்பது மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும் குறையும். ஆகவே, இத்திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு, உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி, விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து, மிக பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில், இதற்கான ஆலோசனை கூட்டம், விரைவில் நடத்தப்படும்” என்கிறார்கள் விவசாய சங்கத்தினர்.