பாநாயகர் தனபால், சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துதள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக நேற்று சபாநாயகர் தனபால் அறிவித்தா்.

முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி தி.மு.க எம்.எல்.ஏக்கள், சபையில் அமளி செய்தனர். இதில் தன்னை திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கி சட்டையைக் கிழித்ததாக சபாநாயகர் தனபால் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சசாட்டினார். இதைக் கண்டித்து அவரது தலைமையில் திமுக எம்.எல்.ஏககள் எம்.பிக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரிடமும் புகார் தெரிவித்தனர்.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “ட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது மரபு இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், நேற்றைய சட்டமன்ற நடவடிக்கைகளில் சபாநாயகர் தனபால் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.