நாச்சியார்.. பாலா படம்தானா?  : இப்படியோர் அதிர்ச்சி

Must read

 

“நாச்சியார் படம் பாலா இயக்கியதுதானா” என்று அதிர்ச்சியோடு கேட்கிறது கோலிவுட்.

முக்கிய வேடங்களில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இப்படம் வரும் 16ம் தேதி வெளியாக இருக்கிறது.

பாலா என்றாலே விவகாரம் தானே.. தவிர, இந்தப்பட டீசரில் ஜோதிகா பேசிய ஆபாச வார்த்தை எல்லோரையும் கலங்கடித்ததே..  அதுபோல புதுசா ஏதோ விவகராம் போல என்று கேட்டால்.. இது வேறு விசயம்!

அதாவது நல்ல விசயம்..

பொதுவாக, ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்வார் பாலா. ஆனால், இந்தப் படத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே முடித்துவிட்டார் பாலா.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.. இரண்டு மணி நேரத்துக்குக் குறைவாக படம் எடுக்காதவர் பாலா. ஆனால் நாச்சியாள் ஓடுவது நூறு நிமிடங்கள்தான்.

இது பாலாவின் சொந்தப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article