தோதரா

திருமணமான ஒரு பெண் அவளது தந்தை வாங்கிய காப்பீட்டு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவர் என்று வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.

பரத் சவுத்ரி 2009 ஆம் ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு மருந்துக் கோரிக்கை பாலிசியை வாங்கி, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டில், அவரது மகள் அங்கிதாவுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டதால் அவர் வாகோடியா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சை செலவு ரூ. 65,000 ஆகும், அதைக் காப்பீட்டு நிறுவனத்திடம் சவுத்ரி கோரினார்.

ஆனால் அங்கிதாவுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது திருமணமாகிவிட்டதால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, அவர் இந்த பாலிசியின் கீழ் வரமாட்டார்கள் என்ற அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பாலிசியை புதுப்பிக்கும் போது அங்கிதா திருமணம் செய்து கொண்டதை சவுத்ரி தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று காப்பீட்டாளர் வாதிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட சவுத்ரி, அக்டோபர் 2022 இல் நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நுகர்வோர் மன்றம்,

”மகள் திருமணமானால் பாலிசியின் கீழ் வரக்கூடாது என்று பாலிசி ஷரத்து எங்கும் கூறவில்லை. பிரிவு 1 கொள்கையானது சார்ந்திருப்பவர்களை உள்ளடக்கும் என்று கூறுகிறது.  மூன்று மாத குழந்தை முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகள் வரை அந்த பாலியின் கிழ் மருத்துவத் தொகையைப் பெற முடியும் என உள்ளது. எனவே தனது மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் கூறிய தொகையை பரத் சவுத்ரிக்கு வழங்கு வேண்டும்”

என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.