பிக்பாஸ் நிகழ்ச்சியோட 12ம் நாளுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருக்காங்க. முதல் ப்ரோமோவுல கவின், சாக்ஷி கிட்ட விழுந்துட்டாருன்னு தான் சொல்லனும். சாக்ஷி பொட்டு வைக்குறதை ரசிக்குறதும், அவங்க கிட்ட வழிஞ்சு பேசுற விதமும், கவினை ரொம்பவே வித்தியாசமா காட்டினாலும், தன்னோட கனவு கணவர் எப்படி இருக்கனும் சாக்ஷி சொன்ன அத்தனையும், தனக்கு பிடித்தமானவைன்னு கவின் சொன்னது கிட்டத்தட்ட காதல் இடம் மாறி மலருதுன்னு உறுதியாக்குதுன்னு தான் சொல்லனும்.

2வது ப்ரோமோவுல நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்ஸ்கள்ல இருத்தரை வெளிய அனுப்பனும்னு சொல்லி சாண்டிக்கு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். அதை வீட்ல இருக்குறவங்களே முடிவு பண்ணிக்கலாம்னு பிக்பாஸ் சொல்ல, ஒரு சிலரை தவிற்த்து மற்ற எல்லாருமே மதுமிதான்னு முடிவு எடுத்துடுறாங்கன்னு தான் சொல்லனும். அப்ப சாண்டியை கூப்பிட்டு பேசுற பிக்பாஸ், இது ப்ரான்க் பண்ண கொடுக்கப்பட்ட டாஸ்க்னு சொல்ல, அந்த காட்சி அப்படியே முடியுதுங்க.

ஏற்கனவே 7 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும், வெளிய போகப்போறது என்னமோ சாக்ஷி இல்லைன்னா பாத்திமா பாபுவா தான் இருக்கும்னு விஜய் தொலைக்காட்சி தரப்புல இருந்து தகவல் கசிய ஆரம்பிச்சுருக்குற நிலையில, இப்படி ஒரு டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்தது வீட்ல மதுமிதா மேல பலரும் கோபத்துல இருக்காங்கன்னோ இல்லை பொறாமையா இருக்குன்னு நினைக்குறாங்கன்னோ யோசிக்குற அளவுக்கு இருந்துச்சுன்னு தான் சொல்லனும். வாக்களிப்புல ஏகோபித்த ஆதரவோட மதுமிதா வீட்ல தொடருவாங்கன்னு தான் இதுவரை வெளியான தகவல்கள் சொன்னாலும், விழுந்த வாக்குகள்ல 20%க்கு மேல் வாங்கின ஒரே போட்டியாளர் அவங்களா தான் இருப்பாங்கன்னும் சொல்லப்படுது.

வீடியோ: [embedyt] https://www.youtube.com/watch?v=8ht-bYbuytg[/embedyt]