டில்லி

திர்க்கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது மோடியின் ஜனநாயகமா என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி40 திருணாமுல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாகவும் தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் கட்சி மாறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

டில்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டில்லியின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேரை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு பாஜக, ”டில்லு துணை முதல்வர் தவறாக கூறி உள்ளார்.  ஆம் ஆத்மியில் இருந்து 7 பேர் இல்லை 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்கள் கட்சியில் விரைவில் இணைய இருக்கிறார்கள்” என பதில் அளித்தது.

இது ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்ட்ரில், “மோடிஜி,  நீங்கள் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அந்த மாநில ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறீர்களா?   உங்கள் அகராதியில் ஜனநாயகம் என்பதற்கு இதுதான் பொருளா?

இவ்வாறு நீங்கள் குதிரை பேரம் நடத்த உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?   ஏற்கனவே நீங்கள் எங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றுள்ளீர்கள்.    எங்கள் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை அவ்வாறு வாங்குவது எளிதான காரியம் அல்ல” என தெரிவித்துள்ளார்.