உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள்: மறுவாக்குப்பதிவு நடத்த மநீம கோரிக்கை

Must read

சென்னை:
ள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் சுமார் 50 ஆண்களும், பெண்களும் திரண்டு வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அத்துமீறலில் ஈடுபட்டதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. கள்ள ஓட்டு போட்டதையும் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

எனவே தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

மேலும் அவர்கள் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் காவல் துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More articles

Latest article