அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கைது வாரண்டு! ஈரான் அதிரடி

Must read

மெரிக்க அதிபர் டொலால்டு டிரம்புக்கு ஈரான் நாட்டு நீதிமன்றம் அதிரடியாக கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது. இது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் செயலுக்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  மேலும் ஈரான் மக்களிடையே இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா தாக்குதல் தொடர்பாக, அதிபர் டிரம்ப் மீது ஈரானில் ஏராளமான கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு அதிபர் டிரம்ப் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அவர்  விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்,  அவருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஈரான் அரசுத் தரப்பு வழக்கறிஞர்  தெரிவித்து உள்ளார்.

இது உலக நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article