பாங்காக்: தாய்லாந்து நாட்டில் பார்கள் திறக்கப்படவுள்ளன என்றும், சில வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தாய்லாந்தில், பப்கள் மற்றும் பார்களை ஜூலை 1ம் தேதி முதல் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

‍மேலும், சமூகப் பரவல் எதுவும் இல்லையென்று, 5 வாரங்களாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர், சில வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பணி அனுமதிகள், தாய்லாந்தில் தங்குமிடம் மற்றும் குடும்பம் உள்ளவர்கள் தாய்லாந்திற்குள் நுழைய முடியும். அதேசமயம், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.