சென்னை

ராஜஸ்தானில் கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரிய பாண்டியனை பாராட்டி திருநாவுக்கரசு ஐ பி எஸ் முகநூலில் கவிதை ஒன்றை பதிந்துள்ளார்.

ஆர் திருநாவுக்கரசு

சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை அடித்த கொள்ளையர்களைப் பிடிக்க ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தான் சென்றிருந்தார்.   அங்கு கொள்ளையனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் தமிழக மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது.   பலரும் பெரிய பாண்டியனின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐ பி எஸ் அதிகாரி ஆர் திருநாவுக்கரசு தனது முகநூல் பக்கத்தில் பெரிய பாண்டியின் மறைவுக்கு ஒரு இரங்கள் கவிதை பதிந்துள்ளார்.

அந்தக் கவிதை பின் வருமாறு :

”தன்னிகரில்லா

தமிழக காவல்துறையின்

வீரத்தினை

ராஜஸ்தான் மண்ணில் விதைத்திட்டட தீரனே!

பெரிய பாண்டியனே!

குற்றமெனில்

எமனையும் விடாது

தமிழக காவல்துறை

என்பதை

பாகிஸ்தான் எல்லை வரை துரத்திச் சென்றாய்

நகைக் கொள்ளையன்

உன் உயிர்க் கொள்ளை

செய்யத்தான்

காலன்(எமன்) என்னும் ஊரில்

பதுங்கியிருந்தானோ!

வீரக் காக்கிச்சட்டைக்கு

புகழ்மாலை தந்த

பெரிய பாண்டியனே!

நீ மண்ணில் சரியவில்லை

வீரத்தில் விண்ணெங்கும் விரிந்துவிட்டாய்” 

என கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.