ஐபிஎல் ஏலம்: பஞ்சாபுக்கு விலை போனார் அஸ்வின்!

Must read

பெங்களூரு,

ன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 7.60 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலப்போட்டியில் கலந்துகொள்வதாக உலக நாடுகளை சேர்ந்த 578 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயர்களை  பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று  காலை 10.30 மணி அளவில் பெங்களூரில் ஏலம் தொடங்கியது. தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்துவீச்சாளரான அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் எதிர்பார்த்த நிலையில் ரூ.7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து பஞ்சாப் அணி அவரை தட்டிச்சென்றனது.

முதல் வீரராக ஷிகர் தவானை  ரூ.5.2 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்து தக்க வைத்ததுள்ளது.

More articles

Latest article