ஐபிஎல்: அம்பதி ராயுடு அதிரடி சதம்….சென்னை அணி அபார வெற்றி

Must read

புனே:

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.

வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்ள். 2 பேரும் அபாரமாக ஆடி அரை பூர்த்தி செய்தனர். ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருந்தபோது இந்த அதிரடி ஜோடி பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து 57 ரன்கள் எடுத்திருந்த வாட்சன் ரன்அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடுவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்குள் சென்னை அணி நுழைந்தது.

More articles

Latest article