மும்பை: 2023ம் ஆண்டு நடைபெற உள்ளது 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி ஏலம்  டிசம்பரில்  நடத்த உள்ளதாக  பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ரூ. 95 கோடி வரை செலவிடலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

2023 சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நடைபெற உள்ளது, மேலும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான அணி உரிமையாளர்கள் சமீபத்தில் முறைசாரா முறையில் பிசிசிஐ-இடம்  பேசியதாகவும், ஆனால், ஏலம் நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், டிசம்பரில் நடைபெறும் ஏலம், மினி ஏலமாக இருக்கும் என்றும், ஐபிஎல் 2023 லீக்கின் போட்டி விவரங்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படாத நிலையில், டிசம்பர் 16ந்தேதி மினி ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த ஏலத்தில், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தைத் தொடங்கும், ஏனெனில் சம்பள வரம்பு கடந்த ஆண்டை விட 5 கோடி அதிகமாக 95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், 2023 மார்ச் நான்காவது வாரத்தில் போட்டிகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,  ஐபிஎல்லின் பதினாறாவது பதிப்பு வழக்கமான முறையில் இந்தியாவில்  விளையாடப்படும் என்று தெரிவித்தார்,. அதாவது இந்த முறை விளையாட்டுகள் 10 இடங்களில் விளையாடப்படும் என்றவர்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் போட்டிக்கு பிசிசிஐ சில திட்டங்களை வகுத்துள்ளதாகவும், இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரியில் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள பல பெண் கிரிக்கெட் வீரர்கள், பெண்கள் ஐபிஎல் போட்டிகள் முன்னேறினால், அதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.