டெல்லி: 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ந்தேதி பெங்களூரில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.

16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி ஏலம்  டிசம்பரில்  நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த மாதம்  பிசிசிஐ தெரி வித்தது. அதன்படி,  2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி பெங்களூரில் தொடங்கம் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் 10 அணிகளின் நிர்வாகிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. அதில்,   ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படும் என்றும், தங்கள் அணியில்  தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2023 க்கான மினி ஏலம் டிசம்பர் 16ந்தேதி நடைபெறும் என தகவல்…