டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, அங்கு அமைக்கப் பட்டிருந்த  ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் தனது வாக்கினை செலுத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 10மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்களிக்க தகுதி உள்ள தலைவர்கள், மாநிலங்களின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.  டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைமை அலுவலகத்தில் இடைக்கலதலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த  தலைவர்கள்  தங்களது வாக்குகளை செலுத்தினர்.

 இந்த நிலையில், குமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும், ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள், வாக்குகளை செலுத்தும் வகையில், அவர்களுடன் செல்லும் கண்டெய்னர் லாரி ஒன்றில், வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ராகுல்காந்தி தனது வாக்கினை செலுத்தினர்.

அதுபோல காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு மும்பை திலக் பவனில் நடைபெற்று வருகிறது. ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.